‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததற்கு தேசிய விருது… கலாய்த்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஷாந்தனு!

  • March 26, 2021 / 06:31 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு. பாப்புலர் இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான ஷாந்தனு குழந்தை நட்சத்திரமாக ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார் ஷாந்தனு.

‘சக்கரகட்டி, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவக் கதைகள்’ என தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம்பெற போராடிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில், 2019-ஆம் ஆண்டிற்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ரசிகர் ஒருவர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது ஷாந்தனுவிற்கு ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததற்காக என்று ஒரு மீம்ஸ் கிரியேட் செய்து ட்விட்டரில் வெளியிட்டார். விஜய்யின் ‘மாஸ்டர்’யில் ஷாந்தனுவிற்கு மிகச் சிறிய வேடம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இது தொடர்பாக ஷாந்தனு ட்விட்டரில் “இந்த மாதிரி என்னை கலாய்த்து வெளியாகும் பல மீம்ஸ்களை பார்த்து பார்த்து டயர்டாகி விட்டேன். நீங்களே சொல்லிட்டீங்க, நடக்காம போயிடுமா? இந்த மீம்ஸ்-யில் உள்ள விஷயம் ஒரு நாள் நிச்சயம் நடக்கும்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus