கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஷெரின்.
பின் ஜேடி&ஜெர்ரி இயக்கத்தில் “விசில்”, ரவிச்சந்திரன் இயக்கத்தில் “உற்சாகம்” ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். சில படங்களில் மட்டுமே நடித்த ஷெரின் அதன்பின் இண்டஸ்ட்ரியை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார்.
இவர் 2019ஆம் ஆண்டு விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் 2015ஆம் ஆண்டு ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளிவந்த “நண்பேண்டா” படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். இதற்குப் பின்தான் இவர் பிக்பாஸ் 3 இல் பங்கேற்றார்.
https://www.instagram.com/p/CCQnLa0F9PR/?igshid=6200nzsn4v3z
இந்த லாக்டவுனில் தனது உடல் எடையை சுமார் 10 கிலோ வரை குறைத்து தற்போது அவர் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.