ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் மோகன் லால் !

  • February 8, 2023 / 10:04 AM IST

இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை . அண்ணாத்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் . இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

மோகன் லால் , ஷிவ்ராஜ் குமார் , ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் .

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் மோகன் லால் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது . ஜெயிலர் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus