சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • October 8, 2022 / 02:39 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஷ்ரதா ஸ்ரீநாத். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே இயக்குநர் மணிரத்னமுடையது தான். அது தான் ‘காற்று வெளியிடை’. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத்துக்கு சின்ன ரோல்தான். அதன் பிறகு ‘இவன் தந்திரன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார்.

‘இவன் தந்திரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத்துக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘விக்ரம் வேதா, ரிச்சி, K-13, நேர்கொண்ட பார்வை, மாறா, சக்ரா’ என தமிழ் படங்கள் குவிந்தது. இதில் ‘விக்ரம் வேதா’ படத்தின் ‘யாஞ்சி யாஞ்சி’ பாடல் மூலம் ஷ்ரதா அதிக கவனம் ஈர்த்தார்.

ஷ்ரதா ஸ்ரீநாத் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் கன்னட மொழியில் இ ஒரு படமும், தமிழ் மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது.இந்நிலையில், நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஸ்டில்ஸை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus