நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியிருந்தார்கள், லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த லாக்டவுனில் சில கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது மற்றும் பொது இடங்களான மால் மற்றும் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் சமயத்தில் பல சினிமா பிரபலங்கள் தாங்கள் ஹாலிடே பயணம் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு எப்போது வெளியே செல்வோம் என்று தவித்து வந்தார்கள்.
இந்நிலையில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஏற்கனவே குடும்பத்துடன் கூர்க்குக்கு வெக்கேஷன் சென்றுவிட்டு அந்த புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தான் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் இந்த வெக்கேஷன் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்டபார்வை” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது விஷால் நடிப்பில் உருவாக்கிவரும் “சக்ரா”, திலிப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் “மாறா” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். லாக்டோன் காரணமாக படப்பிடிப்புகளுக்கோ அல்லது வேறு எந்த வெளியிடங்களுக்கோ செல்லாமல் இருந்ததால் தற்போது தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார்.