தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
அவ்வப்போது தன் அன்றாட வாழ்வு குறித்தும் போட்டோஷூட் நடத்தியும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு தன் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார் இந்த நடிகை.
சமீபத்தில் அரசு லாக்டவுனில் தளர்வுகளை அறிவித்தது. இதன் பின்பு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன் குடும்பத்துடன் வெக்கேஷன் ட்ரிப் சென்று அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், தான் அதிகமாக டுவிட்டரில் ஆக்டிவாக இல்லாததை தற்போது தான் கவனித்ததாகவும், இனிமேல் டுவிட்டரில் ஆக்டிவாக இருப்பேன் என்றும் சபதம் எடுத்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தற்போது ஷ்ரத்தா ஸ்ரீநாத் விஷாலின் “சக்ரா” படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.
I look at my twitter and it feels like glorious puliyogare but without salt. Or peanuts. Boring. And so I'm going to lend some humour to my twitter account like my Instagram. But less controversial. Lawl.
End of 3rd quarter resolution for year 2020 – be more active on Twitter.— Shraddha Srinath (@ShraddhaSrinath) September 23, 2020