2001 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான இஷ்டம் மூலம் தனது திரைப்பட அறிமுகமான நடிகை ஸ்ரேயா சரண். இவர் நடிப்பில் வெளியான சந்தோசம் படம் (2002) மூலம் வணிகரீதியாக தனது முதல் வெற்றியைப் பெற்றார். தென்னிந்தியத் துறையில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார் . மேலும் 75க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
ஸ்ரேயா சரண் தொடர்ந்து இந்தி மற்றும் தமிழ் படங்களுடன் மேலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் . 2007 இல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சிவாஜி படத்தில் நடித்தார். ஸ்ரேயா சரண் 2008 இல், தனது முதல் ஆங்கிலத் திரைப்படமான அமெரிக்க-இந்திய கூட்டுத் தயாரிப்பான தி அதர் எண்ட் ஆஃப் தி லைனில் முக்கிய வேடத்தில் நடித்தார். அவரது பின்வரும் படங்களில் தமிழில் கந்தசுவாமி (2009) மற்றும் மலையாளத்தில் போக்கிரி ராஜா (2010) போன்ற பிரபலமான படங்கள் அடங்கும்.
நடிகை ஸ்ரேயா சரணின் நடனத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . இந்நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களுடன் ஜாலியாக நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார் . தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .