படப்பிடிப்புத் தளத்தில் கூட்டம் கூடியதால் அங்கிருந்து வெளியேறிய ஸ்ருதிஹாசன்!

  • November 23, 2020 / 10:00 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “லாபம்”.

தற்போது இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7சிஎஸ் சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன், கலையரசன், ஜெகபதிபாபு மற்றும் சாய் தன்ஷிகா நடிக்கிறார்கள்.

ராம்ஜி ஒளிப்பதிவில் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அந்தோணி இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்துள்ளார். செவன்.சிஎஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள்.

சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்து வந்ததாகவும், விஜய் சேதுபதி இந்த ஷூட்டிங்கில் இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது.

விஜய் சேதுபதியின் மீண்டும் அந்த ஷூட்டிலிருந்து வந்து லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம். தற்போது இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக படக்குழு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளது.

இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள ஸ்ருதிஹாசன் கூட்டம் இல்லாமல் இருந்தால் மட்டுமே படப்பிடிப்பிற்கு வருவேன் என்று ஏற்கனவே கூறி இருந்தாராம்.

ஆனால் திடீரென படப்பிடிப்பை காண்பதற்கு பலபேர் கூடியதால் இது ஆபத்தானது, கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நேரத்தில் இவ்வளவு கூட்டம் இருக்கும் இடத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்றுவிட்டாராம் ஸ்ருதிஹாசன்.

1

2

3

4

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus