இப்போது ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.
நேற்று முன் தினம் நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் ட்விட்டரில் “சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக, இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதை மீறித்தான் சினிமா வேலைகளும், அரசியல் சேவைகளும் தொடர்ந்தன.
பிரச்சாரத்தைத் துவங்கும்போதே காலில் நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே, காலில் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன்” என்று கூறியிருந்தார்.
தற்போது, கமல் ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசனும், அக்ஷரா ஹாசனும் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று காலையில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில், மருத்துவர் திரு.ஜே.எஸ்.என்.மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் திரு.மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.
அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
On behalf of @ikamalhaasan here’s an update ! Thankyou for all the ❤️ pic.twitter.com/poySGakaLS
— shruti haasan (@shrutihaasan) January 19, 2021