காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!
December 26, 2022 / 06:17 PM IST
|Follow Us
முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை அக்ஷரா ஹாசனின் அக்காவாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து கொண்டிருந்த ஸ்ருதி ஹாசனை ‘7-ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தது தமிழ் சினிமா.
‘7-ஆம் அறிவு’ படத்துக்கு பிறகு நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘3, பூஜை, புலி, வேதாளம், சி3, லாபம்’ என படங்கள் குவிந்தது. நடிகையாக மட்டுமின்றி இசையிலும் அதிக ஆர்வம் உள்ள ஸ்ருதி ஹாசன் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு சூப்பராக இசையமைத்து அசத்தினார்.
மேலும், பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களில் ‘அடியே கொல்லுதே, கண்ணழகா காலழகா, உன் விழிகளில், ஏண்டி ஏண்டி’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
இப்போது, நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் பிரபாஸின் ‘சலார்’ (கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி) மற்றும் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ (தெலுங்கு), சிரஞ்சீவியின் ‘வால்டெர் வீரய்யா’ (தெலுங்கு) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் அவரது காதலன் சாந்தனு ஹசாரிகாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.