மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுக்கொண்ட ஸ்ருதி ஹாசன்!

  • August 13, 2020 / 03:15 PM IST

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.

ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன். இப்போது, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தமிழில் ‘லாபம்’, தெலுங்கில் ‘கிராக், வக்கீல் சாப்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், பிரபல நடிகர் மகேஷ் பாபு மரக்கன்று ஒன்றை நட்டு இந்த கிரீன் இந்தியா சேலஞ்சில் ஸ்ருதி ஹாசனையும் பங்கேற்க சொல்லியிருந்தார். தற்போது, இந்த சேலஞ்சை ஏற்றுக் கொண்டு ஸ்ருதி ஹாசன் தன் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு, அதன் ஸ்டில்ஸை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த சேலஞ்சில் நடிகர்கள் ஹ்ரித்திக் ரோஷன் – ராணா டகுபதி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை பங்கேற்க சொல்லியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

https://twitter.com/shrutihaasan/status/1293542662566420482

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus