கோவை தெற்கு தொகுதியில் கமல் தோல்வி… அப்பாவை பற்றி ஸ்ருதி போட்ட பதிவு!
May 4, 2021 / 08:48 PM IST
|Follow Us
விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டிருந்தார். நேற்று முன் தினம் தேர்தல் முடிவுகள் வெளி வந்தது.
இதில் கோவை தெற்கு தொகுதியில் கமலை விட 1500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக-வை சேர்ந்த வானதி ஸ்ரீநிவாசன் வெற்றி பெற்றார். தற்போது, இது தொடர்பாக கமல் ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எப்போதுமே என் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் #THEFIGHTER #TERMINATOR” என்று குறிப்பிட்டு ஒரு ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.