Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’-க்காக ஸ்ருதி ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • December 26, 2023 / 11:20 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி 2898 AD’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘சலார்’ முதல் பாகம் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதில் ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.

பிரபாஸுக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் ப்ரித்விராஜ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக நடிகை ஸ்ருதி ஹாசன் ரூ.8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus