உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிகர், பாடகர் என பன்முகத் திறமைகளை தன் தந்தையைப் போலவே கொண்டவராவார். 2000ஆம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் படமான “ஹேராம்” இல் குழந்தை நட்சத்திரமாக ஸ்ருதிஹாசன் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
https://www.instagram.com/p/CB7Yp0PBt63/?igshid=d8s98emlwsoi
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்த”ஏழாம் அறிவு” திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். அதிலிருந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப்படங்களில் நடிகையாக வலம் வந்தார்.
இவர் கமலஹாசனின் ‘தேவர் மகன்’ படத்தில் “போற்றி பாடடி பொண்ணே” பாடலில் குழந்தை பாடகராக முதன்முதலில் பாடியிருப்பார். இதில் ஆரம்பித்து கடைசியாக “கடாரம்கொண்டான்”படத்தை ‘கடாரம் கொண்டான்’ என்ற பாடலை பாடியதுவரை பாடகராக தனக்கென தனி இடத்தை மக்களிடம் பிடித்துள்ளார்.
https://www.instagram.com/p/CB7ajAUh-Vs/
இந்த லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அவரது புகைப்படங்களையும் பாடல் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் தண்ணீருக்குள் இருப்பது போன்ற 2015 ல நடந்த போட்டோஷூட் ஒன்றில் எடுக்கப்பட்ட படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் அழகு பதுமையாய் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CB7ap3tB33Z/?igshid=kxuzl2sfp7w8
கடைசியாக இந்தி படமான “தேவியில்”நடித்த ஸ்ருதிஹாசன்.அடுத்து தமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்”லாபம்” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் “கிராக்” என்ற தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CB7alYNBF0b/?igshid=48ha1x6djovn