சூப்பர் ஹிட்டான த்ரில்லர் படம்… ரீமேக்கி ற்காக அந்த விஷயத்தை செய்யும் சிபிராஜ்!

  • October 15, 2020 / 11:30 PM IST

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கன்னட திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கவலுதாரி’. இந்த படத்தை இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கியிருந்தார். இதில் ரிஷி, ஆனந்த் நாக், அச்யுத் குமார், சுமன் ரங்கநாதன், ரோஷினி பிரகாஷ், அவினாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கைப்பற்றினார்.

இதில் ஹீரோவாக சிபிராஜ் நடித்துள்ளார். சிபிக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறாராம். ‘கபடதாரி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த த்ரில்லர் ஜானர் படத்தின் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி முடிவடைந்தது. சமீபத்தில், சிபிராஜின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா ரிலீஸ் செய்தார். தற்போது, இந்த படத்துக்கான டப்பிங் பணியை சிபிராஜ் துவங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

https://twitter.com/Dhananjayang/status/1316606219491180544

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus