சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நடிகர் சித்தார்த்!

  • January 12, 2022 / 12:27 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் ஹீரோவாக நடித்த முதல் படமே பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் தான். அது தான் ‘பாய்ஸ்’. இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார், இதனை ‘ஸ்ரீ சூர்யா மூவீஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது.

‘பாய்ஸ்’ படத்துக்கு பிறகு நடிகர் சித்தார்த்துக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

சித்தார்த் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது சித்தார்த் நடிப்பில் ‘டக்கர், இந்தியன் 2’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், பிரதமர் மோடி பஞ்சாப் சென்றபோது விவசாயிகளால் ஏற்பட்ட இடையூறு குறித்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் போட்ட ட்வீட்டிற்கு சித்தார்த் “subtle cock champion of the world” என்று குறிப்பிட்டு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். சித்தார்த்தின் இந்த ட்வீட் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus