சித்தார்த் – பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ஜிகர்தண்டா’… இதன் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • December 19, 2022 / 04:52 PM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. இதில் ஹீரோவாக பிரபல நடிகர் சித்தார்த் நடித்திருந்தார்

சித்தார்த்திற்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்திருந்தார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கருணாகரன், ஆடுகளம் நரேன், சங்கிலி முருகன், குரு சோமசுந்தரம், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.24 கோடியாம். சமீபத்தில், இதன் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள்X’-யின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் எஸ்.ஜே.சூர்யா – ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus