சித்தார்த் – திவ்யான்ஷா கௌசிக் ஜோடியாக நடித்துள்ள ‘டக்கர்’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

  • June 14, 2023 / 06:02 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் ‘டக்கர், இந்தியன் 2, சித்தா, டெஸ்ட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘டக்கர்’ திரைப்படம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘கப்பல்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கியுள்ளார். இதில் சித்தார்த்திற்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌசிக் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், RJ விக்னேஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார், வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கெளதம் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த படம் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.7.95 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus