சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் ‘டக்கர், இந்தியன் 2, சித்தா, டெஸ்ட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘டக்கர்’ திரைப்படம் இன்று (ஜூன் 9-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை ‘கப்பல்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கியுள்ளார். இதில் சித்தார்த்திற்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌசிக் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், RJ விக்னேஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார், வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கெளதம் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
The promotions are far more interesting than the story in the movie itself. The glamourous heroine & not at all funny comedians continue to reinforce that #Tamil cinema is sorely lacking in those two traditional areas again and again. pic.twitter.com/P9mGDUbYtF