சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • September 26, 2023 / 07:33 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் ‘இந்தியன் 2, சித்தா, டெஸ்ட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘சித்தா’ படத்தை பிரபல இயக்குநர் SU.அருண் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இதனை சித்தார்த்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ETAKI எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களுக்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார், விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார், பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ்.ஏ.பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியை பார்த்த சில பத்திரிக்கையாளர்கள் ‘சித்தா’ டீமை பாராட்டி ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus