சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • September 28, 2023 / 06:44 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் ‘இந்தியன் 2, சித்தா, டெஸ்ட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘சித்தா’ படம் இன்று (செப்டம்பர் 28-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் SU.அருண் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இதனை சித்தார்த்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ETAKI எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களுக்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார், விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார், பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ்.ஏ.பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus