Chithha : சித்தார்த்தின் ‘சித்தா’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • November 21, 2023 / 03:04 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் ‘இந்தியன் 2, சித்தா, டெஸ்ட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘சித்தா’ படம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பிரபல இயக்குநர் SU.அருண் குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இதனை சித்தார்த்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ETAKI எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களுக்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார், விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார், பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ்.ஏ.பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை வருகிற நவம்பர் 28-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Tags