சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) வெளியான படம் ‘பத்து தல’. இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் சிலம்பரசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சிலம்பரசனின் 48-வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளாராம். இதனை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம். இதன் ஷூட்டிங்கை இம்மாதம் இறுதியில் இருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
சிலம்பரசனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இதனை இயக்கியிருந்தார்.
இதில் சிலம்பரசன் ‘கார்த்திக்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். ஆனால், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டுமென கெளதம் மேனனின் முதல் சாய்ஸாக இருந்தது மகேஷ் பாபு தானாம். பின், சில காரணங்களால் மகேஷ் பாபுவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.