குக் வித் கோமாளி’ சீசன் 2-வில் நடிகர் சிலம்பரசன்… வைரலாகும் புது ப்ரோமோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன்’, இயக்குநர் சுசீந்திரன் மற்றும் இயக்குநர் ஞானகிரி இயக்க உள்ள புதிய படங்கள் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ (சீசன் 2) ஷோவின் Grand Finale-வில் நடிகர் சிலம்பரசன் ஸ்பெஷல் கெஸ்ட்டாக கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த Grand Finale எபிசோடை வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிபரப்ப ப்ளான் போட்டுள்ளது விஜய் டிவி. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.