கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு … கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • March 9, 2023 / 07:27 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பத்து தல’ இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

தற்போது, சிலம்பரசனின் 48-வது படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளாராம்.

இதனை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம். இதன் பட்ஜெட் ரூ.100 கோடியாம். மிக விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus