கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

  • May 22, 2023 / 01:55 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பத்து தல’. இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் சிலம்பரசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிலம்பரசனின் 48-வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளாராம். இதனை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம்.

இதன் பட்ஜெட் ரூ.100 கோடியாம். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசனை நடிகர் சிலம்பரசனும், இயக்குநர் தேசிங்கு பெரியசாமியும் நேரில் சந்தித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus