STR48 : கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

  • February 14, 2024 / 08:52 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) வெளியான படம் ‘பத்து தல’. இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் சிலம்பரசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிலம்பரசனின் 48-வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளாராம். இதனை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம்.

இதன் பட்ஜெட் ரூ.100 கோடியாம். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் 2-ஆம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus