‘ஈஸ்வரன்’ பட ஹீரோயின் நிதி அகர்வாலை காதலித்து வரும் STR… விரைவில் திருமணமாமே!
January 10, 2022 / 11:55 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்கச்சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன், மாநாடு’ என படங்கள் குவிந்தது.
மேலும், பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் ‘கலக்குவேன், என் ஆசை மைதிலியே, லூசுப் பெண்ணே, குட்டிப் பிசாசே, நலம்தானா, எவன்டி உன்ன பெத்தான், லவ் பண்ணலாமா வேணாமா’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் சிலம்பரசன். இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் சிலம்பரசன் பிரபல நடிகை நிதி அகர்வாலை காதலித்து வருவதாகவும், இருவருக்கும் மிக விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் சிலம்பரசன் – நிதி அகர்வால் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.