‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் TR நடிப்பில் ‘மாநாடு, மஹா’, ‘மஃப்டி’ ரீமேக் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சிலம்பரசன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார்.
‘ஈஸ்வரன்’ என்ற இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நிதி அகர்வாலும், மிக முக்கிய ரோலில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நடித்து கொண்டிருக்கிறார்கள். சிலம்பரசனின் சினிமா கேரியரில் 46-வது படமான இதனை ‘மாதவ் மீடியா – D கம்பெனி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.
தமன் இசையமைக்கும் இதற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. இந்நிலையில், சிலம்பரசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சில போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். சிலம்பரசன் செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
https://twitter.com/SilambarasanTR_/status/1321707712263016448