STR – நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

  • November 5, 2022 / 02:05 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

இப்போது சிலம்பரசன் ‘பத்து தல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சிலம்பரசன் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இது நம்ம ஆளு’. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஆண்ட்ரியா, சூரி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.35 கோடி வசூல் செய்ததாம்.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus