சிலம்பரசனின் ‘மாநாடு’ சிங்கிள் டிராக் ரிலீஸ் தொடர்பாக தயாரிப்பாளர் போட்ட ட்வீட்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. இப்படத்தை தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்கிறார்கள்.

படத்தின் சிங்கிள் டிராக்கை முதலில் ரம்ஜானுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டிருந்தனர். பின், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைவின் காரணமாக தள்ளி வைத்தனர். தற்போது, சிங்கிள் டிராக் ரிலீஸ் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் “பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இழப்புச் செய்தி காதில் விழுந்து கொண்டேயிருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. மருத்துவமனை வாசலிலும்.. கொரோனா பயத்திலும் இருக்கும் இச்சூழலில் இரக்கமற்று ‘மாநாடு’ படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும். லாக்டவுன் முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி” என்று கூறியுள்ளார்.

Share.