சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பத்து தல’. இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் சிலம்பரசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சிலம்பரசனின் 48-வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளாராம். இதனை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம்.
இதன் பட்ஜெட் ரூ.100 கோடியாம். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சிலம்பரசனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மன்மதன்’. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஜே.முருகன் இதனை இயக்கியிருந்தார்.
இதில் சிலம்பரசன் ‘மதன்குமார் – மதன்ராஜ்’ என டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் சிந்து துலானி, கவுண்டமணி, அதுல் குல்கர்னி, சந்தானம், சத்யன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இப்படத்தை வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.