விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2022) ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனே தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியில் சினேகன், தாமரைச் செல்வி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், வனிதா, தாடி பாலாஜி, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, நிரூப் ஆகிய 14 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி சுஜா வருணி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி அபிநய் – ஷாரிக் இருவரும் எலிமினேட் செய்யப்பட்டார்கள். கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வனிதா தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார்.
கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டிருந்த அறிக்கையில் “பிக் பாஸ் அல்டிமேட் மற்றும் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது. ஆகவே, வேறு வழியின்றி கனத்த மனதுடன் பிப்ரவரி 20-ஆம் தேதி எபிசோடுக்கு பிறகு ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது.
இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் ‘பிக் பாஸ்’ சீசன் 6-யில் உங்களை மீண்டும் சந்திப்பேன்” என்று கூறியிருந்தார். கமலுக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் TR ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும், ப்ரோமோவும் வந்தது. இந்நிலையில், நடிகர் சிலம்பரசனுக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு நாளைக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.