சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) வெளியான படம் ‘பத்து தல’. இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் சிலம்பரசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சிலம்பரசனின் 48-வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளாராம். இதனை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம்.
இதன் பட்ஜெட் ரூ.100 கோடியாம். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி சிலம்பரசனின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.