அடேங்கப்பா… ஒரே வாரத்தில் STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ செய்த வசூல் இத்தனை கோடியா?
September 22, 2022 / 08:18 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.
இப்படம் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 7 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.43 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.