சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.
இப்படம் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.
இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு கெளதம் மேனனுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார்.
இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார், சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். தற்போது, இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சியின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.