STR – GVM கூட்டணியில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • September 2, 2022 / 10:18 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் 2 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus