தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்!

தமிழில் 80 மற்றும் 90களில் கவர்ச்சி கன்னியாக பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ஏற்கனவே இந்தியில் இவரது வாழ்க்கை வரலாற்றை “டர்ட்டி பிக்சர்” என்ற படத்தின் மூலம் எடுத்துக்காட்டி அந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது.

தற்போது இந்த படம் தமிழில் உருவாக உள்ளதாகவும் இந்த படத்திற்கு “அவள் அப்படித்தான்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்த படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கவுள்ளார். காயத்ரி பிலிம்ஸ் மற்றும் முரளி சினி ஆர்ட்ஸ் இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.

சாதாரண குடும்பத்தில் விஜயலட்சுமியாக பிறந்து பின்பு சினிமாவில் சில்க் ஸ்மிதாவாக வலம் வந்த இவரின் வாழ்க்கை வரலாற்றை விரைவில் தமிழ் சினிமாவில் காண பலரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Share.