2019ஆம் ஆண்டு ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளியான தமிழ் ஆன்தாலஜி திரைப்படமான “சில்லுக்கருப்பட்டி” தற்போது டொரண்டோ தமிழ் ஃபெஸ்டிவலில் அவார்டு ஒன்றைப் பெற்று கௌரவம் அடைந்துள்ளது.
ஹலிதா சமீம் இயக்கத்தில் உருவான இந்த ஆன்தாலஜி திரைப்படத்தில் சமுத்திரகனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், சாரா அர்ஜுன், ராகுல் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.
நான்கு வெவ்வேறு கதைகளை கொண்ட இந்த திரைப்படத்தில் பிரதீப் குமார் பின்னணி இசையை பலமாக கொடுத்திருந்தார். வெங்கடேஷ் வெலினேனி இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
தற்போது டொரண்டோ தமிழ் பெஸ்டிவலில் இந்த திரைப்படம் விருது பெற்று கௌரவம் அடைந்துள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த திரைப்பட குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் ஹலிதா சமீமுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம்.