தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் நடித்துக் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “வந்தா ராஜாவா தான் வருவேன்”.
சுந்தர்.சி இயக்கத்தில் இந்த படத்தில் நடித்திருந்த சிம்பு, அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.
தற்போது இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சிம்பு பிரபல நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான “மப்டி” திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது இதை உறுதி செய்துள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குவார் என்றும் உறுதி செய்துள்ளார்.