சுசீந்திரன் மற்றும் சிம்பு இணையும் திரைப்படத்தின் அப்டேட்!

2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுசீந்திரன்.

நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர், பாயும்புலி, சாம்பியன் போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சுசீந்திரன்.

இவர் தற்போது நடிகர் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள இடங்களில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நிதி அகர்வால் நடிக்க உள்ளதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் பூமி எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.