தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான “வந்தா ராஜாவா தான் வருவேன்”.
இதை தொடர்ந்து சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு குறும்படத்தில் நடித்திருந்தார். “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற இந்த குறும்படம் இவரின் “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் சிக்வலாக எடுக்கப்பட்டது.
இதற்கு முன்னர் நடிகை ஓவியா நடிப்பில் வெளியான “90எம்எல்” படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்த சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் “மகா” என்ற படத்திலும் கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
சிலம்பரசன் மற்றும் ஹன்சிகாவுக்கு இடையே காதல் இருப்பதாக ஏற்கனவே வதந்திகள் வந்த நிலையில் இந்த படத்தை பற்றி எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடத்தில் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் தற்போது தெரிவித்துள்ளார்.
“மகா” திரைப்படம் நடிகை ஹன்சிகாவுக்கு ஐம்பதாவது திரைப்படமாகும். அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிம்பு வரும் காட்சிகள் ஏற்கனவே படம்பிடித்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஹன்சிகாவுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்திற்கும் இடையேயான சில காட்சிகள் மட்டும் படம் பிடிக்கப்படவுள்ளது.
எனவே சிம்புவின் இந்தப் படத்தை காண அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். மேலும் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டோன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.