நடிகர் சிம்புவின் செயலால் மனம் மகிழ்ந்த ஈஸ்வரன் திரைப்படக் குழு!

  • November 8, 2020 / 11:46 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்த இவரின் புது லுக், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது மட்டுமில்லாமல், பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பழைய சிம்பு திரும்பி விட்டார் என்று இவரது ரசிகர்கள் சிம்புவின் புது லுக்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறார்கள். இந்நிலையில் அவ்வப்போது இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து அப்டேட் வந்த வண்ணம் உள்ளது.

தற்போது நடிகர் சிலம்பரசன் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாகவும், வருகிற தீபாவளியன்று இந்த படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமான தகவலை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் விரைவில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் டீஸருக்காக சிம்பு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு “ஈஸ்வரன்” படக்குழுவினர் சுமார் 400 பேருக்கு ஒரு கிராம் தங்கம், சேலைகள், இனிப்புகள் ஆகியவற்றை வழங்கி மகிழ்ச்சி படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி துணை நடிகர்கள் 200 பேருக்கு இனிப்பு, துணிமணிகளை வழங்கியுள்ளார். இதனால் அனைவரும் மகிழ்ந்து இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus