தனது புது லுக்குடன் ட்விட்டரில் களமிறங்கிய நடிகர் சிம்பு!

  • October 22, 2020 / 06:59 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது இயக்குனர் சுசீந்திரன் உடன் இணைந்து தன் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நிதி அகர்வால் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் பூமி எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிம்பு திண்டுக்கல்லில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் பாரதிராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தில் பாரதிராஜா இடம்பெற்றுள்ள காட்சிகளை படம் பிடித்து வருகிறார்களாம். விரைவில் இந்த படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் எனவும் தெரிகிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மாதவ் மீடியா இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்த லாக்டவுனில் தனது இடையே 105 கிலோவிலிருந்து 75 கிலோ வரை குறைத்துள்ள சிம்புவின் இந்தப் புது லுக் எப்போது வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் பல நாட்களாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை ஏற்கனவே கூறியதுபோல சிம்புவின் புது லுக் கொண்ட வீடியோ வெளியாகி, மேலும் சிம்பு ட்விட்டரில் தனது அக்கவுண்டை ஆரம்பித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். மீண்டும் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார் சிம்பு என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus