சிம்பு மற்றும் சுசீந்திரன் இணையும் திரைப்படத்தின் லுக் எப்போது வெளியாகும்?

  • October 19, 2020 / 10:39 PM IST

2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுசீந்திரன். நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர், பாயும்புலி, சாம்பியன் போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சுசீந்திரன்.

மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நிதி அகர்வால் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் பூமி எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிம்பு திண்டுக்கல்லில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் பாரதிராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தில் பாரதிராஜா இடம்பெற்றுள்ள காட்சிகளை படம் பிடித்து வருகிறார்களாம். விரைவில் இந்த படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் எனவும் தெரிகிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மாதவ் மீடியா இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

வருகிற 2021 ஆம் வருடம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிம்பு இந்த படத்திற்காக 25 கிலோ எடையை குறைத்துள்ளதாகவும், இந்த படத்தில் புது லுக்கில் இவர் வருவார் என்றும் வருகிற ஆயுத பூஜையன்று சிம்புவின் புது லுக் வெளியாகும் என்றும் தற்போது செய்தி வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus