மீண்டும் உடல் எடையை அதிகரித்த சிம்பு ! என்ன காரணம் தெரியுமா ?

  • May 13, 2022 / 01:44 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு வெற்றியை தந்த படமாக திகழ்கின்றது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவிற்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்பொழுது கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்திலிருந்து சமீபத்தில் ஒரு பாடல் வெளியானது. அந்த பாடல் சுமாரான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று வருகிறது ,

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது அடுத்த படமான பத்து தல படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியானது .மாநாடு படத்தில் உடல் எடையை குறைத்த நடிகர் சிம்பு தற்பொழுது உடல் எடையை கூட்டி உள்ளார் . உடல் எடையை அதிகரித்த பின் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிம்பு மேலும் பத்து தல படத்திற்கு தயாராகி விட்டதாகவும் பதிவு செய்துள்ளார் .

இந்த படத்தில் சிம்பு மாசான டான் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்பு இணைய உள்ளார் .விரைவில் படப்பிடிப்பு முடிய இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus