ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

  • January 31, 2023 / 05:55 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு . நீண்ட வருடம் கழித்து இயக்குனர் ஜி.வி.எம் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார் சிம்பு .இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார் . பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . சமீபத்தில் இவருக்கும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் திருமணம் நடந்து .

இந்நிலையில் தற்போது பத்து தல படத்தின் முதல் பாடல் பற்றின தகவல் வெளியாகி உள்ளது . ரகுமான் இசையில் உருவாகி உள்ள இந்த பாடல் பிப்ரவரி மூன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க தளபதி 67 படத்தின் அறிவிப்பு வீடியோவும் பிப்ரவரி 3 -ஆம் தேதி தான் வெளியாக உள்ளதால் இரண்டு நடிகரின் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு அவர்களது வீடியோவை நிச்சயம் ட்ரெண்ட் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus