சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ ட்ரெய்லர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

  • January 5, 2021 / 03:12 PM IST

‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் TR நடிப்பில் ‘ஈஸ்வரன், மாநாடு, மஹா, பத்து தல’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

இதில் ஹீரோயினாக நிதி அகர்வாலும், மிக முக்கிய ரோலில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நடித்துள்ளார்கள். சிலம்பரசனின் சினிமா கேரியரில் 46-வது படமான இதனை ‘மாதவ் மீடியா – D கம்பெனி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. தமன் இசையமைத்துள்ள இதற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

கடந்த வாரம், இந்த படத்தினை பார்த்த சென்சார் குழு ‘யு’ சர்டிஃபிகேட் அளித்தது. படத்தை ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை வருகிற ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus