தனது 50-வது படத்தை செதுக்கும் சிம்பு !

  • December 29, 2022 / 07:12 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு . நீண்ட வருடம் கழித்து இயக்குனர் ஜி.வி.எம் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார் சிம்பு .இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார் . பத்து தல சிம்புவின் 48வது படம் . தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது . அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாக உள்ளது .

இந்நிலையில் நடிகர் சிம்பு 50 வது படத்திற்காக இப்போதே தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது . சிம்பு நடிக்கும் ஐம்பதாவது படத்தை சுதா கொங்கரா அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது . இதனால் சிம்புவின் ரசிகர்கள் சிம்புவின் 50-வது படத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus