பூமிகாவுக்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • August 1, 2023 / 10:58 AM IST

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூமிகா சாவ்லா. இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடன் அமைந்தது. அது தான் ‘பத்ரி’. இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘ரோஜாக் கூட்டம்’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு நான்கு வருடங்கள் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த பூமிகா, 2016-ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தில் நடித்தார்.

இதில் ‘ஐஸ்வர்யா’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சூர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘முன்பே வா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகி, பூமிகாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்துக்கு பிறகு ‘களவாடிய பொழுதுகள், யு டர்ன், கொலையுதிர் காலம்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

பூமிகா தமிழ் மட்டுமில்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, போஜ்புரி ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். இந்நிலையில், இவர் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2002-யில் ரிலீஸான தமிழ் படம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’.

இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்க, ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். இதில் ஹீரோயினாக சிம்ரன் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டுமென மணிரத்னம் பூமிகாவையும் அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் பூமிகாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus